News

தமிழாக்கம் செய்யலாம், வாருங்கள்!

வணக்கம் நண்பரே!, உலகம்.net உங்களை அன்போடு வரவேற்கிறது. இணையத்தில் பயனர் கணக்கு ஒன்றினை உருவாக்கி, உங்களது எண்ணங்களை வெளியிடுங்கள்.

வேர்ட்பிரேஸ் எனப்படும் இணைய பதிவு மென்பொருள் அனைத்து மொழிகளிலும் (தமிழிலும் கூட) வெளியாகியுள்ளது. அது ஒரு கட்டற்ற மென்பொருளாகும். யார் வேண்டுமானலும் அதனை தன் வசப்படுத்திக்கொள்ளலாம். GPL எனப்படும் உரிமம் கீழ் அதன் காப்புரிமை உள்ளது.

வேர்ட்பிரேஸ் மொழி பெயர்ப்பு செய்வதால் வரும் நண்மைகள்:

  • வேர்ட்பிரேஸின் மேலாண்மைகள் மற்றும் அமைப்புகள் தமிழிலேயே இருக்கும்
  • ஆங்கில வார்த்தைகளுக்கு நிகராக இருக்கும் தமிழ் வார்த்தைகளை அறிந்து கொள்ளலாம்
  • தமிழில் நீங்கள் அறிந்திராத, புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ளலாம்.
  • தமிழ் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கு உங்களது பங்கினை அளிக்கலாம்
  • உங்களது வலைப்பதிவு வேர்ட்பிரேஸில் நிருவியிருந்தால் இது உங்களக்கு பயன்படும்

இதனால் உலகம்.netக்கு என்ன பயன்/லாபம்?
உலகம்.net என்ற எங்களுது தளம் வேர்ட்பிரேஸ் மென்பொருளை வைத்துக்கொண்டு இயங்குகிறது. ஆகையால், இத்தளத்தில் பதிவுகளை வைத்திருப்போர் அனைவருமே, அவரவருடைய அமைப்புகளை தமிழில் காணலாம். இது ஆங்கிலம் தெரிந்திராதவர்களுக்கு பயன்படும்.

எப்படி பங்களிப்பது?
http://translate.wordpress.com எனப்படும் தொடுப்பில் உங்களது பயனர் கணக்கினை உருவாக்கி, மொழி பெயர்ப்பை துவங்கலாம். ஏற்கனவே வேர்ட்பிரேஸ்.காம் பயனர் கண்க்கு வைத்திருபோர், நேரடியாக மொழி பெயர்ப்பை துவங்கலாம்

மொழி பெயர்ப்பின் நிலைமையை எங்கு கண்டறிவது?
வேர்ட்பிரேஸ் தமிழாக்கம் என்ற கூகிள் குழுமம் உள்ளது. அதில் சேர்ந்து மொழி பெயர்ப்பின் நிலைமையை அறிந்து கொள்ளலாம். மேலும் அங்குள்ளவர்கள் உங்களுக்கு துணை புரிவார்கள்.

எதனை வைத்து மொழி பெயர்ப்பது?
கீழ் வரும் தளங்களை பயன்படுத்தவும்

வாருங்கள்! வந்து மொழி பெயர்த்து தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொள்ளுங்கள்

Leave a Reply