News

தில்லி குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

வணக்கம் நண்பரே!, உலகம்.net உங்களை அன்போடு வரவேற்கிறது. இணையத்தில் பயனர் கணக்கு ஒன்றினை உருவாக்கி, உங்களது எண்ணங்களை வெளியிடுங்கள்.

நேற்று மாலை 6 மணியளவில், ஐந்து தொடர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இறங்களை இப்பதிவுன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய அரசு, இதில் தலையிட்டு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதனை  இந்திய முஜாஹிதீன் குழு பொறுப்பேற்றுள்ளது. ஏன் இவர்கள் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே பெங்களூர், அகமதாபாத், சூரத்  போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. அதனுடைய புலன் விசாரனை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இந்தியாவில், வன்முறைகள் தலைதூக்க தொடங்கியுள்ளது.

குண்டு வைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

மக்கள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தனர்? ஏன் அவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிரீர்கள்? அவர்களை துன்புருத்தும் என்னத்தை கைவிடுங்கள் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய நோக்கு இந்திய அரசு என்றால், அவர்களிடம் நேரடியாக மோதுங்கள். அப்பாவி மக்களை விட்டுவிடுங்கள்.

Leave a Reply