பயர்பாக்ஸ் வலையுலாவியின் நீட்சி வழியாக இந்த “தமிழ் சொல் திருத்தி” உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் அகராதி ஒப்பன் ஆப்பிஸ் விக்கியிலிருந்து எடுக்கப்பட்டது. இது இப்பொழுது குறைந்த தமிழ் வார்த்தைகளைக்கொண்டுள்ளது. ஆதலால், தற்பொழுது இது பீட்டவில் உள்ளது.
விரைவில் முழுமையான தமிழ் எழுத்து பிழை நீக்கியை வெளியிடுகின்றோம். இதில் உள்ள குறைகளையும் நிறைகளையும் எங்களுக்கும் அனுப்புங்கள். நீட்சியின் கருத்தாடல் மன்றத்தில் பங்கேற்று உங்களது கேள்விகளையும் பதில்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
எப்படி பொருத்துவது?
* இந்த தொடுப்பில் சென்று, நீட்சியை இறக்கவும்.
* பதிவிறக்கிய கோப்பை இழுத்து பயர்பாக்சின் மேல் விடுங்கள். அல்லது Firefox உலாவி file – > open file சென்றும் பதிவிறக்கிய நீட்சியைத் தெரிவு செய்யலாம்
* மற்ற பயர்பாக்ஸின் நீட்சி நிறுவுதலை போல இதுவும் நிறுவப்படும்
தமிழா! சொல்திருத்தி திட்டம்
கட்டற்ற மென்பொருள் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும் சொற்திருத்திகளில் பயன்படுத்துவதற்கான சொற்பட்டியலை உருவாக்குவதில் தமிழா குழு ஈடுபட்டுள்ளது.
தமிழா குழுவினர்
* முகுந்தராஜ் (mugu...@thamizha.com)
* இளஞ்செழியன் (e...@thamizha.com)
* ராதாகிருஷ்ணன் (nrad...@yahoo.com)
* விஜய் (vija...@hotmail.com)
நீட்சியை உருவாக்கியவர்கள்
* ரவிசங்கர் (ravi...@gmail.com)
* பாலச்சந்தர் முருகானந்தம் (mbch...@gmail.com)
இன்னும் நிறைய தமிழ் ஆர்வலர்கள், நண்பர்கள் தமிழ் சொல் திருத்தியை உருவாக்க பங்களித்துள்ளார்கள்.
உதவி/துணை
உங்களுடைய பிரச்சனைகள், குற்றசாட்டுகள், குறைபாடுகள், அம்சங்கள், கேள்விகள் போன்ற வற்றை நீட்சியின் கருத்தாடல் மன்றத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்
தொடுப்புகள்
கீழிறக்க http://code.google.com/p/tamilspellchecker/
கருத்தாடல் மன்றம் http://ulagam.net/forum/forum.php?id=5
உங்களிடம் தமிழ்சொற்பட்டியல் இருந்தால் இத்திட்டத்திற்கு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்





