தமிழ்மணத்தில் இடுகைகளைப் புதுப்பிக்க ஒரு பெட்டியை முதற்பக்கத்தில் தந்துள்ளனர். அதில் தான் bug உள்ளது. நீங்கள் உஙகளது வலைப்பதிவினை தமிழ்மணத்தில் இணைத்திருந்தால், இந்த பிரச்சனை/bug உங்களுக்கு தெரியாது/வராது. ஆனால், உங்களது பதிவு இணைக்கவில்லை என்றால், பதிவின் தொடுப்பினை இடுகைகளைப் புதுப்பிக்கும் பெட்டியில் போட்டு, உங்கள இடுகைகளை தமிழ்மணத்தில் சேர்த்துவிடுவீர்கள். இங்கு தான் பிரச்சனை/bug இருக்கிறது.
http://www.ulagam.netக்கும், http://ulagam.netக்கும் வித்தியாசம் தமிழ்மணத்தில் உள்ள இடுகையை புதுப்பிக்கும் சேவைக்கு தெரியவில்லை. அதனால் இரண்டு முறைகள் உஙகளது பதிவில் உள்ள இடுகைகளை சேர்க்கலாம். இது வலைபதிவர்களுக்கு கொண்டாட்டம் தான் என்றாலும், அது தமிழ்மணத்திற்கு சரியன்று. ஒருவர், இரண்டு நாடகளாக ஒரே இடுகையை இரண்டு முறை சேர்க்க முடியும்.
நீங்களும் சோதித்து பாருங்கள். தமிழ்மணம் நிர்வாகிகள் இதனை சீர்படுத்தவேண்டும் என்று உலகம்.net சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.





