உலகம்.net ஆரம்பித்து நெடுநாட்கள் ஆயிற்று. ஆனால் அதனை பயன்படுத்துவோர் மிக மிக குறைவு. இன்னும் சொல்ல போனால், யாரும் பயன்படுத்துவது கிடையாது. தமிழில் எதாவது ஒரு சேவைகயை இணையத்தில் செய்ய வேண்டும் என்று என்னி உலகம்.netஐ நிறுவினேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
மனம் விட்டு கேட்கிறேன். உலகம்.net இடமிருந்து என்ன மாதிரி இணைய தமிழ் சேவையை எதிரிபார்க்கிறீர்கள்? எப்படி இருந்தால் உலகம்.net சேவைகளை பயன்படுத்துவீர்? யோசனை கூறுங்கள். தமிழ் சார்ந்த இணைய சேவைகளை ஆதரிப்பீர். என்னை போன்றோர்களை ஊக்க படுத்துங்கள். உலகம்.net சேவைகள், இணையத்தில் ஒரு தமிழ் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று ஆசைபடுவது தவறா? இல்லை, மற்றவர்கள் போல் நடிகர், நடிகையின் படங்கள் காண்பித்தல், புதிய திரைப்படத்தின் விழிகள் காட்டுவது, இலவசமாக இடம் தருவது என்று பல பல சமுக சேவைகள் தான் இணையத்தில் தமிழர்கள் விரும்புகிறார்களா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் மிகுந்த மன வருத்தத்துடன் இந்த பதிவினை எழுதுகிறேன். யார் மனதையும் புண்படுத்ததும் நோக்கத்துடன் எழுதவில்லை. பணம் கொடுத்தால் தான் உலகம்.netஐ பயன்படுத்துவீர்களா? அந்த அளவுக்கு என்னிடம் பணம் கிடையாது. இணையத்தில் செல்வாக்கு உள்ளவர்கள் எது செய்தாலும் அவற்றை வரவேற்கப்படுகின்றன. என்னை போல் இருப்பவர்களை வரவேற்பார்களா?
பதில் சொல்லுங்கள்!
- உலகம்.net





