Signup
  • 629 வலைப்பதிவுகள்

  • 2990 பயனர்கள்

தமிழ் சொல் விட்ஜெட் – இன்று முதல்

Posted by: உலகம்.net குழு | டிசம்பர் 26, 2008 | 3 Comments |
0
Digg me

நண்பர்களே!

நாம் அனைவரும் தமிழை விட அதிகமாக ஆங்கிலத்தில் படிக்கின்றோம். ஒவ்வொரு ஆங்கில வார்த்தையையும் தமிழில் மொழி பெயர்த்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்கிறோம். ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் எதுவென்று நாம் அறிவது இல்லை. வலைப்பதிவர்கள் கூட சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதி விடுகின்றனர். அது அப்படியே நடைமுறைக்கு வந்து விடுகிறது. இதனால் தூய தமிழை மறந்து விடுகிறோம். அதனை தவிர்க்க ஒரு புதிய முயற்சியாக ஒரு விட்ஜெட்டை செய்து நிருவியுள்ளோம்.

தமிழ் சொல் விட்ஜெட் என்பது தான் அது. இதனை நிங்கள் உங்களது வலைத்தளத்தில் பொருத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு முறை உங்களது பக்கம் கீழ் இறக்கும்போது, இது புதிய ஆங்கில சொல்லையும், அதற்கு இணையான தமிழ் சொல்லையும் காட்டும். இதன் மூலம் நீங்களும் உங்களது வாசகர்களும் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் சொற்களை கற்கலாம்.

இந்த முயற்சிக்காக ஆங்கிலம்-தமிழ் சொற்களை கொடுத்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
1. அக்னி சிறகு – கணினி குழுமம்
2. ரவி சங்கர்
3. பெர்மி சாப்ட்

எங்களிடம் உள்ள சொற்பட்டியலின் எண்ணிக்கை 464 மட்டுமே. நீங்கள் உங்களிடம் உள்ள ஆங்கிலம்-தமிழ் அகராதியை வைத்திருந்தால் அதனை பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் சொல் விட்ஜெட்டை உங்களது வலைப்பதிவில் பொருத்திக்கொள்ள கீழே உள்ள கோடுகளை நகலெடுத்து வார்ப்புருவில் பொருத்திக்கொள்ளுங்கள்.
<script language="javascript" src="http://api.ulagam.net/tamilword.php?format=js"></script>

எதேனும் தவறுகள்/குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தமிழ் நாட்காட்டி விட்ஜெட் பற்றிய கேள்விகள்/பிரச்சனைகளை விவாதிக்க, சேவைகள் மன்றத்திற்கு செல்லவும்

under: பொது
Tags: , , ,

Responses -

தமிழ் சொல் விட்ஜெட்டை உங்களது வலைப்பதிவில் பொருத்திக்கொள்ள கீழே உள்ள கோடுகளை நகலெடுத்து வார்ப்புருவில் பொருத்திக்கொள்ளுங்கள்.

?? how to copy paste the code ? also you comment section doesnt allow english typing

இது தான் அந்த HTML கோடு.

தமிழ் மணத்தை எப்படி பிளாகரில் இணைப்பது என்று சொல்லவும்

Leave a response -

Your response:

Categories