News

Archive for the ‘பொது’ Category

தமிழ் நாட்காட்டி சரியாக தெரியவில்லையா?

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12th, 2008
வணக்கம் நண்பரே!, உலகம்.net உங்களை அன்போடு வரவேற்கிறது. இணையத்தில் பயனர் கணக்கு ஒன்றினை உருவாக்கி, உங்களது எண்ணங்களை வெளியிடுங்கள்.

தமிழ் நாட்காட்டியில் சில பிரச்சனைகள் இருந்தன. அதனை சரி செய்து, இன்று புதிதாக நிறுவியுள்ளோம். நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தானாக உங்களுக்கு மாறிவிடும். <script> கோடினை பயன்படுத்துவோர்களுக்கு நாட்காட்டி சரியாக தெரிய வில்லையெனில் நீங்கள் <iframe> கோடினை பயன்படுத்தலாம்.
<iframe src="http://api.ulagam.net/calendar.php" frameborder="0" width="200px" height="250px"></iframe>

நன்றி.

தமிழ் நாட்காட்டி - இன்று முதல்

சனிக்கிழமை, டிசம்பர் 6th, 2008

அன்பு வலைப்பதிவர்களே!

நாம் தினமும் நமது வீடுகளில் நாட்காட்டியை வைத்து கொள்வோம். ஒவ்வொரு நாளும் நாட்காட்டியை கிழித்து அந்த நாளுக்குரிய செய்திகளை நாம் தெரிந்துகொள்வோம். அப்படி பட்ட நாட்காட்டியினை உலகம்.net, விட்ஜெட் வழியாக இன்று முதல் வழங்க தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ் நாட்காட்டி
தமிழ் நாட்காட்டியினை எங்கு வேண்டுமானலும் பொருத்திக்கொள்ள இந்த விட்ஜெட் பயன்படும். கீழே உள்ள கோடினை நகலெடுத்து உங்களது வலை தளங்களில் உள்ள வார்புருவில் ஒட்டிக்கொள்ளலாம். இது என்ன தேதி, என்ன மாதம், என்ன கிழமை என்பதை காட்டும்.

<script language="javascript" src="http://api.ulagam.net/calendar.php?format=js"></script>

எதேனும் தவறுகள்/குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தமிழ் நாட்காட்டி விட்ஜெட் பற்றிய கேள்விகள்/பிரச்சனைகளை விவாதிக்க, சேவைகள் மன்றத்திற்கு செல்லவும்

தமிழ் மற்றும் தமிழர்களை நம்பி இணையத்தில் எதாவது செய்ய இயலுமா?

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5th, 2008

உலகம்.net ஆரம்பித்து நெடுநாட்கள் ஆயிற்று. ஆனால் அதனை பயன்படுத்துவோர் மிக மிக குறைவு. இன்னும் சொல்ல போனால், யாரும் பயன்படுத்துவது கிடையாது. தமிழில் எதாவது ஒரு சேவைகயை இணையத்தில் செய்ய வேண்டும் என்று என்னி உலகம்.netஐ நிறுவினேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

மனம் விட்டு கேட்கிறேன். உலகம்.net இடமிருந்து என்ன மாதிரி இணைய தமிழ் சேவையை எதிரிபார்க்கிறீர்கள்?  எப்படி இருந்தால் உலகம்.net சேவைகளை பயன்படுத்துவீர்? யோசனை கூறுங்கள். தமிழ் சார்ந்த இணைய சேவைகளை ஆதரிப்பீர். என்னை போன்றோர்களை ஊக்க படுத்துங்கள். உலகம்.net சேவைகள், இணையத்தில் ஒரு தமிழ் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று ஆசைபடுவது தவறா?  இல்லை, மற்றவர்கள் போல் நடிகர், நடிகையின் படங்கள் காண்பித்தல், புதிய திரைப்படத்தின் விழிகள் காட்டுவது, இலவசமாக இடம் தருவது என்று பல பல சமுக சேவைகள் தான் இணையத்தில் தமிழர்கள் விரும்புகிறார்களா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் மிகுந்த மன வருத்தத்துடன் இந்த பதிவினை எழுதுகிறேன். யார் மனதையும் புண்படுத்ததும்  நோக்கத்துடன் எழுதவில்லை. பணம் கொடுத்தால் தான் உலகம்.netஐ பயன்படுத்துவீர்களா? அந்த அளவுக்கு என்னிடம் பணம் கிடையாது. இணையத்தில் செல்வாக்கு உள்ளவர்கள் எது செய்தாலும் அவற்றை வரவேற்கப்படுகின்றன. என்னை போல் இருப்பவர்களை வரவேற்பார்களா?

பதில் சொல்லுங்கள்!

- உலகம்.net

தமிழ் வலைப்பதிவுச் சேவை எவ்வாறு இருத்தல் வேண்டும்?

திங்கட் கிழமை, நவம்பர் 24th, 2008

உலகம்.net தொடங்கி நாட்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் எதிர்பார்த்த படி அனேக வரவேற்பு ஏதும் இல்லை. தமிழ் வலைப்பதிவுகளில் உலகம்.net ஒரு முன்னொடியாக திகழவேண்டும் என்று ஆசையில் துவங்கினோம். தற்பொழுது 160 பயனர்கள், மற்றும் 40 வலைப்பதிவுகள் உள்ளன. ஆனாலும், பதிவுகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

நாங்களும் என்னெனமோ வசதிகள் எல்லாம் செய்து பார்த்து விட்டோம். நேரம் செல்வு ஆனது தான் மிச்சம். தமிழ் வலைப்பதிவர்கள் மத்தியில் ஒன்றும் எடுபடவில்லை. ஆகையால், உங்களையை கேட்கின்றோம். ஒரு தமிழ் வலைப்பதிவுச் சேவை எவ்வாறு இருத்தல் வேண்டும்? என்ன வசதிகள் வேண்டும்? எப்படியெல்லாம் இருந்தால் நிங்கள் உலகம்.netஐ பயன்படுத்துவீர்கள்?

உங்களது கருத்துக்களை பின்னூட்டமளியுங்கள். நீங்கள் கூறும் அனைத்தும் நிறுவ ஆசைப்படுகிறோம்.

நன்றி
உலகம்.net

என்ன விட்ஜெட் செய்யலாம்? யோசனை சொல்லுங்கள்!

புதன் கிழமை, அக்டோபர் 29th, 2008

உலகம்.net கடந்த சில தினங்களில் திருக்குறள், பழமொழி போன்ற வற்றை விட்ஜெட்டாக தமிழ் வலைப்பதிவர்களுக்கு கொடுத்தது. அடுத்த கட்ட முயற்ச்சியாக, திருக்குறளை மின்னஞ்சல் கையழுத்தின் கீழ் சேர்த்து அனுப்புவது, facebookல் பொட்டியாக பொருத்திக்கொள்வது போன்ற வசதிகளை செய்து தந்தது. மேலும் அடுத்த கட்ட முயற்சியாக, நாங்கள் பலதர பட்ட தமிழ் சார்ந்த வற்றை விட்ஜெட் வழியாக கொடுக்க விரும்புகிறோம்.  அதற்கு உங்களது யோசனைகள் தேவைப்படுகிறது.

எந்த மாதிரியான தமிழ் விட்ஜெட்டுகள் செய்யலாம், அதன் செயல்பாடுகள் போன்றவற்றை யோசித்துக் பின்னூட்டமாக கூறுங்கள்.