News

திருக்குறள் மின்னஞ்சல் கையெழுத்து v1.0

வியாழன், அக்டோபர் 16th, 2008
வணக்கம் நண்பரே!, உலகம்.net உங்களை அன்போடு வரவேற்கிறது. இணையத்தில் பயனர் கணக்கு ஒன்றினை உருவாக்கி, உங்களது எண்ணங்களை வெளியிடுங்கள்.

நண்பர்களே!,
திருக்குறளை அனைவரும் தெரிந்துகொள்ளும் முயற்சியாக திருக்குறள் விட்ஜெட் மற்றும் facebook திருக்குறள் செயலி போன்ற சேவையை உலகம்.net வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, மின்னஞ்சல் கையெழுத்தாக திருக்குறளை நிருவ உலகம்.net ஒரு புதிய சேவையை அறிமுக படுத்துகிறது. இது ஜிமெயில் பயனர்களுக்கு மட்டும் வேலை செய்யும்.

[caption id="attachment_131" align="alignleft" width="143" caption="ஜிமெயில் "][/caption]

அதாவது ஜிமெயிலில் Gmail Labs என்று உள்ளது. ஜிமெயிலின் அம்சங்களை சோதனை செய்து பார்க்கும் வசதி நாம் ஒவ்வொருவருக்கும் தானாக அமையும். அப்படி இல்லையென்றால், இந்த தொடுப்பினை https://mail.google.com/mail/?labs=1#settings நகலெடுத்து உங்களது வலையுலாவி முகவரி பொட்டியில் இட்டால், உங்களுக்கு Gmail Labs அம்சங்கள் அனைத்தும் பயன்படுத்த முடியும்.

அந்த அம்சங்களில் ஒன்றான Random Signature என்பதை பயனபடுத்தலாம். இதன் மூலம் நமது திருக்குறளை சேர்க்க முடியும். அதனை அனுமதித்தபின், Settings -> Generalக்கு செல்லவும். அங்கு Signature: என்ற இடத்தில் Append a random signature from feed: என்று இருக்கும். அதனின் கட்ட பெட்டியில் அழுத்தி, இந்த தொடுப்பை http://api.ulagam.net/kural-rss.php பக்கத்தில் இருக்கும் எழுத்துப்பெட்டியில் போட்டு, கீழெ சென்று Save Changes பொத்தனை அழுத்தி சேமியுங்கள். பிறகு Compose Mail என்ற தொடுப்பை அழுத்தினால், உங்களது கையெழுத்தின் கீழ் திருக்குறளை காணலாம். இது முதல் முறை வறாது. ஆகையால், Discard பொத்தனை அழுத்தி, மீண்டும் Compose Mail என்ற தொடுப்பை இரண்டாவது முறை அழுத்தினால், உங்களது கையெழுத்தின் கீழ் திருக்குறளை காணலாம்.

நணபர்களுக்கும் இது பற்றி கூறுங்கள். ஒப்பில்லாத உலகப்பொதுமறையை இணையத்தில் பரப்புங்கள். உங்களது கருத்துக்களையும், குறைகளையும் உலகம்.net சேவைகள் மன்றத்தில் முறையிடலாம்.

facebookல் திருக்குறள் விட்ஜெட்

புதன் கிழமை, அக்டோபர் 15th, 2008

நண்பர்களே,
திருக்குறள் விட்ஜெட்டை எந்த ஒரு வலைதளத்தில் நிருவ வசதி செய்து தந்தோம். இன்னொரு முயற்சியாக, facebookல் திருக்குறள் விட்ஜெட்டை நிருவமுடியும். அதாவது facebook செயலி தொழில்நுட்பத்தின் வாயிலாக, இந்த திருக்குறளை ஒவ்வொரு facebook பயனர் பக்கங்களில் பொருத்த முடியும். மேலும் அதனை பொட்டிகள்(Boxes) எனப்படும் பக்கத்தில் கூட தள்ளி தொகுத்துக்கொள்ள முடியும்.

தொடுப்பு: http://apps.facebook.com/thirukkural/

facebookல் உள்ளே நுழைந்த பின்னர் தான் மேலே உள்ள தொடுப்பினை பயன்படுத்த முடியும். இல்லையேல், பக்கம் காணவில்லை என்று கூறிவிடும். நுழைந்த பின்னர், மேலே உள்ள தொடுப்பினை சுட்டி, இந்த திருக்குறள் விட்ஜெட் செயலிக்கு அனுமதி அளியுங்கள். அதன் பின்னர் திருக்குறள் விட்ஜெட் பக்கம் வரும். அதில் உள்ள Add to Profile என்னும் பொத்தானை அழுத்தி உங்களது பக்கங்களில் பொருத்திக்கொள்ளுங்கள்.
திருக்குறள் விட்ஜெட் பற்றித்தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்

facebookல் திருக்குறள் விட்ஜெட்டை நிருவ படம் பார்த்து அறிக:

மேலும் facebook அறியாதோர், அது orkut போல ஒரு சமூக கூடமாகும். அதில் உங்களது பயனர் கணக்கினை பதித்து, திருக்குறளை விட்ஜெட்டை நிருவி, நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது கருத்துக்களை பின்னூட்டமளியுங்கள்.

நன்றி

உலகம்.net

திருக்குறள் விட்ஜெட் - இன்று முதல்

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 12th, 2008

அன்பு வலைப்பதிவர்களே!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

அனைவரும் திருக்குறளை பற்றி நன்கு அறிவீர். வள்ளுவன் இந்த உலகிற்கு அற்பனித்த ஒப்பில்லா சொத்து. ஏரத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிவைத்த திருக்குறள் இன்றும் பேசபடுகிறது. தற்போதைய வாழ்க்கை முறைக்கும் பயன்படுகிறது. அப்படி பட்ட திருக்குறளை உலகம்.net விட்ஜெட் வழியாக இன்று முதல் வழங்க தொடங்குகிறது.

திருக்குறளை எங்கு வேண்டுமானலும் பொருத்திக்கொள்ள இந்த விட்ஜெட் பயன்படும். கீழே உள்ள கோடினை நகலெடுத்து உங்களது வலை தளங்களில் உள்ள வார்புருவில் ஒட்டிக்கொள்ளலாம். இது எதேனும் ஒரு குறளை உங்களுக்கு காட்டும்.
<script language="javascript" src="http://api.ulagam.net/randomkural.php?format=js"></script>
திருக்குறள் விட்ஜெட்
குறிப்பிட்ட குறளை பொருத்த, அதனின் எண்ணை சரியாக கொடுக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு:
<script language="javascript" src="http://api.ulagam.net/randomkural.php?format=js&id=1"></script>
இங்கே, id=1 என்பது குறள் எண் 1ஐ குறிக்கும்.

இதனுடைய செயல்முறை இங்கு காணலாம்
பிளாக்கர் மற்றும் சொந்த வளைதளத்தினை வைத்திருப்போர் மேலே உள்ள கோடுகளை விட்ஜெட் வழியாக தங்களது வலைப்பதிவில் பொருத்திக்கொள்ளலாம்.

எதேனும் தவறுகள்/குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.  திருக்குறள் விட்ஜெட் பற்றிய கேள்விகள்/பிரச்சனைகளை விவாதிக்க, சேவைகள் மன்றத்திற்கு செல்லவும்