உலகம்.net வலைப்பதிவர்களுக்கான நீட்சிகள்
சனிக்கிழமை, அக்டோபர் 4th, 2008உலகம்.net பயனர்களுக்கு வணக்கம்!
இணையத்தில் நாம் ஒவ்வொருவரும் எதொ ஒன்றை படிக்கின்றோம். ரசிக்கின்றோம். மகிழ்கின்றோம். ஒரு காலத்தில் யாரோ ஒரு சிலர் மட்டுமே எழுதுதல், மற்றவர்கள் அதன் வாசகர்களாக இருத்தல் என்பது போய், இப்பொழுது பதிவு எழுதுவது மூலம் நாம் நமது சொந்த கருத்தினை முன்வைக்கவும், மற்றவர்களுடன் கருத்தாடல் செய்யவும் வசதிகளும் அதிகமாக இணையவலையில் காணப்படுகிறது. ஒவ்வொரு விசயத்திலும், நமது கருத்தினை நமது சொந்த தளங்களில் வெளியிடுகிறோம். இணைய நண்பர்கள் அதனை படித்து அவர்களுடைய பின்னூட்டங்களையும் போட்டுவிட்டு தான் செல்கிறார்கள். ஆகையால், இப்பொழுது எழுத்தாளரும், வாசகர்களும் அவர்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். அந்த பரிமாற்றத்தை எமது வலைத்தளத்திலும் காணலாம்.
உதாரணத்துக்கு நமது உலகம்.netல் நான்கு நீட்சிகள் நிருவப்பட்டிருகிறது.
1. ShareThis
2. Thamizmanam WP plugin
3. WP-EasyDigg
4. wpLicense
ShareThis
இதன் மூலம் நீங்கள் உங்களது உலகம்.net பதிவில் எழுதிய இடுகையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். ஓர்குட், பேஸ்புக், ரெட்டிட், டிக், டெலீசியஸ், ஸ்டம்பில் அப்பான், பிரெண்ட் ஃபீட் போன்ற சேவைகளில் நேரடியாக உங்களது இடுகையை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
இடுகையை மின்னஞ்சலாக அனுப்பும் வசதியும் உண்டு.
Thamizmanam WP plugin
தமிழ்மணம் இணையம் அறிந்திராத தமிழ் பதிவர் இருக்க முடியாது. ஏனென்றால், தமிழ்மணம் , இணையத்தில் கதிரவனைப்போல பிரகாசிக்கிறது. வலைகளில் எழுதும் பதிவுகளை திரட்டிக் கொண்டு வந்து ஓர் இடத்தில் தொகுத்து அற்புதமாக கொடுக்கிறது. அதனுல் உங்களது உலகம்.net வலையை எளிய முறையில் பொருத்த இந்த நீட்சி உதவும்
WP-EasyDigg
டிக் சேவை என்பது அவரவர் எழுதும் இடுகையை வாசகர்கள் படித்து ஓட்டளிக்கும் ஒரு சேவையாகும். இது மிகவும் பிரபலமான ஒன்று. அதனை உலகம்.netல் நிருவியதற்காக மகிழ்கின்றேன். விரைவில் தமிழிஷ்.காம் ஓட்டளிக்கும் நீட்சியையும் நிருவுகிறோம்.
wpLicense
நீங்கள் எழுதும் ஒவ்வொரு இடுகையும் உங்களுக்கே உரித்தானது. அதனை எவ்வாரு வாசகர்கள் அல்லது மற்ற பதிவர்கள் பயன்படுத்தலாம் என்று இந்த காப்புரிமை நீட்சியின் மூலம் நீங்கள் கூறலாம். உங்களது எண்ணங்களும் எழுத்துக்களும் மற்றவர்கள் நகல் எடுப்பதை சட்டரீதியாக நீங்கள் சந்திக்கலாம்.
இன்னும் எத்தனையோ நீட்சிகள் நிருவ ஆசைதான். ஒவ்வொன்றையும் சரியான முறையில் சோதித்த பிறகு தான், உலகம்.net பயனர்கள்/பதிவர்கள்/வாசகர்கள் ஆகிய உங்களின் பயன்பாட்டுக்கு வெளியிடுகிறோம். எதேனும் குறைகள் / தவறுகள் இருந்தால் கருத்தாடல் மன்றத்தில் முறையிடுங்கள்.
