facebookல் திருக்குறள் விட்ஜெட்
புதன் கிழமை, அக்டோபர் 15th, 2008நண்பர்களே,
திருக்குறள் விட்ஜெட்டை எந்த ஒரு வலைதளத்தில் நிருவ வசதி செய்து தந்தோம். இன்னொரு முயற்சியாக, facebookல் திருக்குறள் விட்ஜெட்டை நிருவமுடியும். அதாவது facebook செயலி தொழில்நுட்பத்தின் வாயிலாக, இந்த திருக்குறளை ஒவ்வொரு facebook பயனர் பக்கங்களில் பொருத்த முடியும். மேலும் அதனை பொட்டிகள்(Boxes) எனப்படும் பக்கத்தில் கூட தள்ளி தொகுத்துக்கொள்ள முடியும்.
தொடுப்பு: http://apps.facebook.com/thirukkural/
facebookல் உள்ளே நுழைந்த பின்னர் தான் மேலே உள்ள தொடுப்பினை பயன்படுத்த முடியும். இல்லையேல், பக்கம் காணவில்லை என்று கூறிவிடும். நுழைந்த பின்னர், மேலே உள்ள தொடுப்பினை சுட்டி, இந்த திருக்குறள் விட்ஜெட் செயலிக்கு அனுமதி அளியுங்கள். அதன் பின்னர் திருக்குறள் விட்ஜெட் பக்கம் வரும். அதில் உள்ள Add to Profile என்னும் பொத்தானை அழுத்தி உங்களது பக்கங்களில் பொருத்திக்கொள்ளுங்கள்.
திருக்குறள் விட்ஜெட் பற்றித்தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்
facebookல் திருக்குறள் விட்ஜெட்டை நிருவ படம் பார்த்து அறிக:
மேலும் facebook அறியாதோர், அது orkut போல ஒரு சமூக கூடமாகும். அதில் உங்களது பயனர் கணக்கினை பதித்து, திருக்குறளை விட்ஜெட்டை நிருவி, நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது கருத்துக்களை பின்னூட்டமளியுங்கள்.
நன்றி
உலகம்.net




